Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மீனவர் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

0

'- Advertisement -

DCM – 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது

அதன் தொடர்ச்சியாக

திருச்சி தெற்கு மாவட்ட மாநகர மீனவர் அணி சார்பாக மீனவர் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

 

இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட தலைவர் சையத் பாபா பக்ருதீன் வரவேற்று பேசினார் .

 

மாவட்ட அமைப்பாளர். சாந்தா சாலமோன் மாநகர அமைப்பாளர் பெஞ்சமின் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர் .

இவ்விழாவில் மீனவர் தொழிலாளர்களுக்கு சீருடைகள் வழங்கி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் .

மாநகர அவை தலைவர் நூர்கான்

நன்றியுரை ஆற்றினார் .

 

மாநகர மீனவர் அணி தலைவர்

ஜி .ரத்தினவேல். இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்

லீலாவேலு, மூக்கன் மாநகர துணை செயலாளர் சந்திரமோகன் பகுதி செயலாளர் டி பி எஸ் எஸ் ராஜ் முஹம்மத் மற்றும் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழியின் சிறப்புரையில்:-

மக்களுக்கு நண்பராக, கழகத்தினருக்கு உடன்பிறப்பாக, திராவிட கொள்கைகளை தாங்கி நிற்கும் இளைஞராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

அதனால்தான் அவரை தலைவர் 2.O என அழைக்கிறோம். –

கடலின் அறிவியலையும், அதன் தன்மையையும் அறிந்துகொண்டு கடலை ஆளக்கூடியவர்களாக மீனவர்கள் திகழ்கிறார்கள்-

சென்னை போன்ற பெருநகரங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்டால் உடனே தங்களின் படகுகளின் மூலம் மக்களைக் காப்பாற்ற புறப்படுபவர்கள் மீனவர்கள்தான். –

மிக்ஜாம் புயலில் மக்களுக்கு உதவிசெய்த மீனவர்களை அழைத்து அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தியவர் நமது துணை முதலமைச்சர் அவர்கள் – என திமுக இளைஞரணிச் செயலாளர் பிறந்தநாள் விழாவில் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. உரையாற்றினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.