Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர திமுக இளைஞரணி சார்பாக திமுகவின் மூத்த முன்னோடிகள் 48 நபர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொற்கிளி வழங்கினார்.

0

'- Advertisement -

திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர திமுக இளைஞரணி சார்பாக திமுகவின் மூத்த முன்னோடிகள் 48 நபர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமை பொற்கிளி வழங்கினார்.

 

துணை முதல்வர் (DCM) 48 எனும் தலைப்பில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட சார்பாக இளைஞரணி செயலாளர் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்டம் சார்பாக 48 நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது

 

அதன் தொடர்ச்சியாக திருச்சி காந்தி மார்க்கெட் அரியமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மாநகர இளைஞரணி சார்பாக பொற்கிலி வழங்கும் விழா நடைபெற்றது .

விழாவிற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்புரை ஆற்றினார்.

 

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெங்கடேஷ்குமார் மாநகர இளைஞரணி அமைப்பாளர் முர.முத்து தீபக் ஆகியோர் தலைமை வகித்தனர் .

 

திமுக துணைப் பொதுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

மு பெ சாமிநாதன் பொற்கிழி. வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ்

பொய்யாமொழி,

 

மாநகரக் செயலாளர் மு மதிவாணன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .

 

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே என் சேகரன், சபியுல்லா, பகுதி கழகச் செயலாளர் பகுதிகழகச் செயலாளர்கள் நீலமேகம், கொட்டப்பட்டு தர்மராஜ், ராஜ்முகம்மது, மோகன், மணிவேல், விஜயகுமார், பாபு , சிவக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரவீந்திரன், தேசிங்குராஜ், பெர்க்னாட் சாமிநாதன், அல்லாபிச்சை, கண்ணன், சையத்சாகிப், சரத்குமார், ரஞ்சித்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

 

இறுதியாக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் பார்த்தசாரதி நன்றியுரை ஆற்றினார்..

 

இந்த நிகழ்வில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது :-

நம்முடைய பயணம் இயக்கத்திற்கு என்று வரும் போது கொள்கை தடம் மாறாமல் வரவேண்டும் நீதிக்கட்சி முதல் தலைவர் கலைஞர் காலம் முதல் இன்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை நாம் எல்லாம் அவர்களைப் பின்பற்றி கொள்கை கூட்டமாக இருந்திட வேண்டும்

 

நம்முடைய மாநில இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் சொல்வது கொண்டாட்டம் என்பது நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கு கொள்கை பிரகடனபடுத்துகின்ற வகையில் நம் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் , அதன் வழியில் தான் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகின்ற நிகழ்வு நடைபெறுகிறது.

 

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற நூலில் நம் திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு துறை சார்ந்த திட்டங்களையும் தொகுத்து வழங்கி இருக்கின்றது .

 

இத்திட்டங்களால் மக்கள் பெற்ற பயன்களை இப்புத்தகம் அழகாக விளக்குகிறது நம் துணை முதல்வர் இந்த புத்தகத்தை நமக்கு வடித்து தந்திருக்கின்றார் இந்தப் புத்தகம் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்

கொரோனா காலத்தில் ஒன்றிய அரசு இருக்கக்கூடிய பிரதமர் கைதட்டுங்கள் விளக்கேற்றுங்கள் என்று கூறினார் கைதட்டுவதாலும் விளக்கேற்றுவதாலும் கொரோனா சென்று விடுமா என நமக்கு தெரியாது நாம் கொள்கை ரீதியாக வேறுபட்டாலும் நம் நாட்டின் பிரதமர் ஒன்று சொல்கின்றர் என்று கவனித்தோம் ஆனால் நம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நம் தலைவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார் நாம் அறிவியல் சார்ந்து இயக்கத்தில் இருக்கின்றோம் என்பதற்கு உதாரணமாக இதைக் கூறினேன்.

நம் துணை முதல்வர் மதுரை எம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்ற காரணத்தினால் ஒரு செங்கலை கடந்த தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தின் போது எடுத்து வந்து பாரதிய ஜனதாவின் தோலை உரித்ததின் விளைவாக இப்பொழுது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மிக விரைவாக கட்டப்பட்டு வருகிறது.

 

அமைச்சர் வெள்ளை கோயில் சாமிநாதன் உரையில்:

இன்று நமது துணை முதல்வரும் மாநில விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநில விளையாட்டு துறைக்கு பொறுப்பேற்றது முதல் இவ் விளையாட்டுத்துறை தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெறுகின்ற வகையில் எடுத்துச் சென்று இருக்கின்றார்

விளையாட்டுத்துறை என்று ஒரு துறை இருக்கின்றதா என்று பலர் நினைத்த நேரத்தில் அத்துறையை சிறப்பாக வழி நடத்தி வருகின்றார் நம் துணை முதல்வர்

நம் தமிழ்நாட்டின் விளையாட்டு வீராங்கனைகள் ஒன்றிய அரசின் பல்வேறு விருதுகளை பெற்று வரும் செய்திகளை நாள்தோறும் பார்க்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 

துணை முதல்வராக பொறுப்பேற்று மாவட்ட தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார் அதன் வரிசையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது நான் ஆச்சரியப்பட்டேன் திடீரென தொலைபேசியில் பொது மக்களிடம் தொடர்பு கொண்டு உரையாடினார் இது போன்ற நிகழ்வை நான் இதுவரை பார்த்ததில்லை. இந்த ஆய்விற்கு முன்னதாக துணை முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டத்தில் முகாமிட்டு மக்களின் பல்வேறு துறைகளை நம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மற்றும் எங்களுக்கு கூட தெரியாமல் மக்களிடம் குறைகளை கேட்டு அவற்றை பட்டியலிட்டு துணை முதல்வரிடம் அளித்தனர் அவற்றைப் பெற்ற துணை முதல்வர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆலோசனை செய்து பிறகு அந்த சம்பந்தப்பட்ட மனுதாரரிடம் தொடர்பு கொண்டு உங்களுடைய குறை குறிப்பிட்ட நாளில் நிவர்த்தி செய்யப்படும் எனக் கூறியது பொதுமக்களிடம் நன்மதிப்பையும் மாவட்ட நிர்வாகத்தில் பணியின் வேகமும் அதிகரித்தது இவ்வாறு அக்கறையுடன் செயல்பட்டவர் தான் நம் துணை முதல்வர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.