திருச்சி ஏர்போர்ட் அருகே ரோமன் கத்தோலிக் ஆப் ஜீசஸ் என்கின்ற.கிறிஸ்தவ அமைப்பிற்கு 6 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்தது எப்படி ? அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி கேள்விக்கு மேயர் மழுப்பல் .
புதிய நியமன கவுன்சிலர் பதவியேற்பு.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ 15.91 கோடி ஒதுக்கீடு
இன்று மேயர். அன்பழகன் தலைமையில் நடந்த திருச்சி மாமன்ற கூட்டத்தில் 120 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன்,
துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது .
துணை ஆணையர்கள் வினோத், க.பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம் ,மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
பின்னர் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்தில் மாமன்றத்தின் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி ப.புவனேஸ்வரன் பதவி ஏற்றுக்கொண்டார்.
மேயர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன,
துணை மேயர் ஜி. திவ்யா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த விவாதம் வருமாறு;-
அதிமுக மாமன்ற தலைவரான கவுன்சிலர் அம்பிகாபதி
இன்றைய மாமன்ற கூட்டத்தில் பேசும்போது:-
மாமன்றத்தில் நியமன உறுப்பினராக பதவியேற்ற புவனேஸ்வரனுக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் .
செம்பட்டு மயானம் நிலத்திற்கு கம்பி வேலி அமைக்க மதிப்பீடு தயார் செய்த ஆணையருக்கும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அதேபோல் விமான நிலைய நுழைவாயில் பகுதி இரவு நேரத்தில் இருட்டாக உள்ளது அடிக்கடி விபத்து நடக்கிறது. இங்கு மின்விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். திருச்சி-புதுக்கோட்டை ரோடில் மாநகர பகுதியில் தெருவிளக்கு அமைக்க வேண்டும். தமிழக முதல்வர் திருச்சிக்கு இந்த சாலை வழியாக தான் வருகிறார்.
அதேபோல் திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலை அமைக்கும் பணியின் போது வாகனங்கள் வி.எம்.டி சாலையில் திருப்பி விடப்பட்டது. இதனால் வி.எம்ல்.டி சாலை மிக அதிக அளவில் சேதமடைந்துள்ளது. கான்கிரீட் சாலையான இந்த சாலையை புதுப்பித்து கொடுக்க வேண்டும். ஸ்டார் நகர் சாலையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதையும் அமைத்து கொடுக்க வேண்டும்.
எனது வார்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்படும் ரோமன் கத்தோலிக் ஆப் ஜீசஸ் என்ற செயிண்ட் ஜோசப் அமைப்புக்கு 6000 சதுர அடிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் அந்த பகுதியில் உள்ள 23 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தை எப்படி ஒரு அமைப்புக்கு பத்திரம் செய்து கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை.
ஏற்கனவே இது போல் 5.75 ஏக்கர் அரசு நிலம் பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த அமைப்பினர் அதை தானம் செட்டில்மெண்டாக மாற்றி சதுர அடி ரூ.3,500 என்று தனி நபர்களுக்கு விற்பனை செய்து விட்டனர். அவர்கள் நிலவணிகம் செய்வதற்காக அரசு நிலத்தை ஏன் கொடுக்க வேண்டும். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு மேயர் முறைப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மலுப்பலாக பதில் கூறினார் .

கூட்டத்தில் கவுன்சிலர்கள், முத்து செல்வம்,சுரேஷ் ,பிரபாகரன்,பைஸ் அகமது,,முத்துக்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினார்..இதற்கு மேயர் பதிலளித்து பேசும்போது,கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கூட்டத்தில்,திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்கள்,கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் பொது சுகாதார பணியில் ஈடுபடும் வாகனங்களின் ஓட்டுநர்கள் என மொத்தம் 3243 நபர்களுக்கு முதல் கட்டமாக உணவு வழங்கும் பணியினை மேற்கொள்ள ரூபாய் 15.91 கோடிக்கு ஒப்புதல் வழங்குவது உள்பட 120 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

