Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா:’முன்னாள் நீதிபதி கே.சந்துரு சிறப்புரை .

0

'- Advertisement -

இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து

 

நாம் பெற்றுள்ள உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும்

 

திருச்சி விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேச்சு.

 

நாம் பெற்றுள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற

இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் நீதியரசர் கே.சந்துரு கூறினார்.

 

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே‌‌.ச. வரவேற்றுப் பேசினார். பின்னர் அனைவரும் அரசியல் சாசன நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.வாழ்த்துரையாற்றினார். விழாவில்

சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதியரசர் கே.சந்துரு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-

ஏதோ சட்டம் என்பது வழக்கறிஞர்களுக்கானது. அவர்கள் மட்டும் கொண்டாடும் நாள் இது என்று எண்ணாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிறைந்த அரங்கில்

அரசியலமைப்புச் சட்ட நாள் குறித்த நிகழ்வு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று நான் பேசுவதற்கும், நீங்கள் கேட்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆகும். அதுவே இந்தியாவின் மரபணு ஆகும். அதன் மூலம் நமக்குக் கிடைத்துள்ளதே இந்த பேச்சரிமை. எழுத்துரிமை, உரையாடும் உரிமை உள்ளிட்ட அனைத்துமாகும். எனவே நாளை சனநாயகக் காவலர்களான இளைஞர்கள் இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நாம் பெற்றுள்ள உரிமையை நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். அதற்கே இந்தக் கூடுகை.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முன்னாள் நீதிபதி சந்துரு பதிலளித்தார்.

முடிவில் கல்லூரி இணைமுதல்வர் முனைவர் த.குமார் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நுண்கலைகள் குழு, என்.சி.சி 2 தமிழ்நாடு கவசப்படை, மாணவர் பேரவையினர் இணைந்து செய்திருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.