திருச்சியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு 25 ஆவது மாவட்ட மாநாடு .
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு 25 ஆவது மாவட்ட மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரம்யாஸ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் டிசிசிஎல் நிறுவன தலைவர், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க நிறுவனத் தலைவர் சகிலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ‘
டிக் பைபர் எம்டி தணிகைவேல், மாநில நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, ராதாகிருஷ்ணன், கோவர்தனன் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் சையது முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
கேபிள் டிவி ஆபரேட்டர்களின் தொழில் பாதுகாப்பிற்கு தமிழக அரசு உரிய ஆவண செய்ய வேண்டும் என இச்சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.

