பாஜக திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்றது.
பாஜக திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சிறுபான்மை அணி புதிய நிர்வாகிகள் அறிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
சிறுபான்மை அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் வி.சார்லஸ் முன்னிலை வகித்து பேசினார்.
மாநகர் மாவட்ட பாஜக சிறுபான்மை அணி தலைவர் ஆர். அந்தோணிசாமி நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக சிறுபான்மை அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

