திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இல்லாத குடியிருப்புகளில் 1687 வாக்காளர்களை முறைகேடாக சேர்த்துள்ள திமுகவினர் . புள்ளி விவரத்துடன் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மனு.
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இல்லாத குடியிருப்புகளில் 1687 வாக்காளர்களை முறைகேடாக சேர்த்துள்ள திமுகவினர் . புள்ளி விவரத்துடன் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் ஆகியோருக்கு திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :-
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உள்பட்ட ரயில்வே காலனியில் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டில் இடிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசித்தவர்கள் தற்பொழுது குடியிருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

மேற்கண்டவர்களின் கணக்கீட்டு படிவங்களை (Enumeration Form) திமுகவினர் தங்களது ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமிருந்து (BLO) பெற்று அதை விதிகளுக்கு புறம்பாக பூர்த்தி செய்து மீண்டும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) வழங்கி வருவதாக தெரிய வருகிறது. மேற்கண்ட வாக்காளர்களின் உண்மைதன்மையை (Genuinity) கண்டறிந்து அவர்களின் வாக்குரிமையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வெளியிட்டுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார் .