நாளை வியாழக்கிழமை திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் மாலை 4.மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (20.11.2025) வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 11 கே.வி. உயர் அழுத்த மின்பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
அதன்படி தமிழ்நாடு சிறப்பு காவல் படை, கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சல நகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் வங்கி காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி புதூர், அரசு காலனி, ராமச்சந்திரா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, கே.ஆர்.எஸ். நகர், ராஜீவ் காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டிய பட்டி, அன்பிலார் நகர், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

