Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முனைவர் பட்டம் பெற்ற அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு சேகர் அருண் சார்பில் ஒட்டப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வரும் பிரம்மாண்ட வாழ்த்து போஸ்டர் .

0

'- Advertisement -

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து புறத்தேர்வு பேராசிரியரால் முனைவராக அறிவிக்கப்பட்டார்.

 

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி பாரதி தாசன் பல்கலை.க்கு உட்பட்ட தேசியக் கல்லூரி விளையாட்டுத் துறையில் தனது முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிக்கு பதிவு செய்து, அதற்கான முன்மொழிவை 2021 அக்டோபர் மாதம் சமர்ப்பித்தார்.

 

‘பள்ளிக் குழந்தைகளின் உடல் திறன் செயல்பாட்டை இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டறிதல்’ எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான தகவல்களை அமைச்சர் அன்பில் மகேஸ் சேகரித்து, ஆய்வுக் கட்டுரையை தயாரித்தார். முனைவர் பட்ட வழிகாட்டியாக கல்லூரியின் உடற்கல்வி துறை இயக்குநர் டி.பிரசன்ன பாலாஜி இருந்தார்.

 

இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி நேற்று ஆய்வுக் கட்டுரைக்கான வாய்மொழித் தேர்வு தேசியக் கல்லூரியில் நடைபெற்றது.

 

இத்தேர்வுக்கு தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.திருமலைக்குமார் புறத்தேர்வராக இருந்தார்.

 

அமைச்சரின் ஆய்வுக் கட்டுரை தொடர்பாக உடற்கல்வித்துறை நிபுணர்கள், விளையாட் டுத் துறை ஆர்வலர்கள், பார்வையாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அன்பில் மகேஸ் பதில் அளித்தார். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஸுக்கு முனைவர் பட்டத்தை உறுதி செய்து புறத்தேர்வு பேராசிரியர் சான்றிதழ் வழங்கினார்.

உடற்கல்வி செயல்பாடுகள் பள்ளிக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன? கணினிசார் நுண்ணறிவு தொழில்நுட்பம் கற்றலுக்கு எவ்வாறு உதவுகிறது ? பகுப்பாய்வு செய்து ஆய்வறிக்கை அளித்துள்ளார். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உடல் இயக்க செயல்பாடுகள் உடற்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் இயந்திர கற்ற தொழில்நுட்பத்தின் பயன்களை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வை அமைச்சர் மேற்கொண்டு உள்ளார் . பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்த பிறகு முனைவர் பட்டம் வழங்கப்படும்.

 

விளையாட்டுத்துறையில் முனைவர் சான்றிதழ் பெற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு சேகர் அருண் அமைச்சரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் என திருச்சி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட வாழ்த்து போஸ்டர் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.