Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் எடப்பாடி முன்னணியில் இணைந்த ஓபிஎஸ் அணியினர். திமுக வெற்றி பெறும் என ஓபிஎஸ் கூறியாதால் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட பலர் திரும்புகின்றனர்?

0

'- Advertisement -

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் திருச்சி,ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

 

சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களான திருச்சி மாவட்ட அவைத் தலைவா் ஆா்.ராஜ்குமாா், திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஏ.பால்ராஜ் ஆகியோர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

 

இதை போல் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் ஏற்பாட்டில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சோ்ந்த 30 பேரும், எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளா் பக்கநாடு மாதேஸ் ஏற்பாட்டில் இருப்பாளி ஊராட்சி, செவடனூா் திமுக கிளை செயலாளா் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோரும் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

 

நிகழ்ச்சியின் போது பவானி வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேல், பவானி வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளா் குப்புசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

திருச்சி, நவ. 17– ஓ.பி.எஸ்., அணியின் திருச்சி மாவட்ட அவைத்தலைவர், அ.தி.மு.க.,வில் ஐக்கியமான நிலையில், விரைவில் பல முக்கிய நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு வருவர் என்று தெரிவித்துள்ளார்.

 

திருச்சியைச் சேர்ந்த ராஜ்குமார், இருமுறை அரசு வழக்கறிஞராக இருந்தவர் . அ.தி.மு.க.,வில் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலராக இருந்த நிலையில், ஓ.பி.எஸ்., அணியின் அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழுவில் இணைந்தார். அங்கு திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் ஓ.பி.எஸ்., வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றார். இது அவரது உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அங்குள்ளவர்கள் மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு வர தயாராகி வருகின்றனர்.

 

இதுகுறித்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர் ராஜ்குமார் ஆகியோர் பத்திரிக்கையாளர்களிடம் கூறிய போது :- ‘‘விரைவில் பல முன்னாள் அமைச்சர்கள்( வெல்லமண்டி நடராஜன் உட்பட ) அ.தி.மு.க.,வுக்கு திரும்புவர். அவர்கள் தலைமையில் அனுமதிக்காக காத்துள்ளனர். அ.தி.மு.க., தான் முக்கியம். அதை விடுத்து, தி.மு.க., ஜெயிக்கும் என்று ஓ.பி.எஸ்., கூறியதை ஏற்க முடியவில்லை. ஆகையால் அ.தி.மு.க.,வுக்கு வந்து விட்டோம். உரிமை மீட்புக்குழு கூடாரம் விரைவில் காலியாகும்,’’ என்றானர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.