திருப்பூர் மாவட்டம் அவினாசி வள்ளுவர் வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பராஜ (வயது .63) இவர், மர அரவ ஆலை ஒன்றை குத்தகை எடுத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் பூமணி என்ற (வயது 42) பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து உள்ளாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சின்னப்பராஜ் மேலும் சில பெண்களுடன் கள்ள தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பூமணி சின்னப்பராஜிடம் கேட்டுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே உல்லாசமாக இருக்கலாம் என பூமணி, சின்னப்பராஜை அழைத்துள்ளார். அதன்படி, தனிமையில் சந்தித்த இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையோர தடுப்பு சுவர் மீது அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூமணி தான் கையில் கொண்டு வந்த செல்போன் பவர் பேங்கை கொண்டு சின்னப்பராஜின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
தலையில் தாக்கியதில் அந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், அந்த பெண் கேணில் கொண்டு வந்த பெட்ரோலை சின்னப்பராஜ் மீது ஊற்றி கொளுத்த முயன்றுள்ளார். அப்போது சின்னப்பராஜ் எழுந்து ஓடி உயிரை காப்பாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். ஆனால், ஆத்திரம் தீராத பூமணி அவர் மீது தீ வைத்துள்ளார். இதன் காரணமாக அவர் பள்ளத்தில் விழுந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அந்த பெண் அதிகாலை காவல் நிலையத்திற்கு சென்ற நடந்ததை கூறி சரணடைந்துள்ளார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை செய்து வருகின்றனர் .

