திருச்சியில் இன்று காலை உயிர் பிழைக்க காவலர் குடியிருப்புக்குள் புகுந்த வாலிபரை துரத்தி துரத்தி சென்று போலீஸ் அதிகாரியின் வீட்டிற்குள் வைத்து வெட்டி சாய்த்த கும்பல்
திருச்சியில் இன்று காலையில் நடந்த பயங்கர சம்பவம்.
போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்து வாலிபர் கொடூர கொலை .
5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தனர்
திருச்சியில் இன்று காலை நடந்த பரபரப்பு கொலை சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு :-
திருச்சி மாசிங் பேட்டை பீமநகர் கீழ தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 24). இவர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள
ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி சங்கீதா (வயது 22) மனைவி மற்றும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

தாமரைச்செல்வன் இன்று காலை 8 மணி அளவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 5 மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். பிறகு அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி முயன்றனர் ..
தாமரைச்செல்வன் உயிர் பிழைப்பதற்காக அங்குள்ள தெருக்களில் ஓடினார்.
இதையடுத்து அருகில் உள்ள மார்சிங் பேட்டை பள்ளிவாசல் அருகே உள்ள அரச மரம் அருகே வந்தபோது அவரது தோள்பட்டையில் வெட்டினர் . இது தொடர்ந்து காவலர் குடியிருப்பு புகுந்தால் உயிர் பிழைக்கலாம் என அந்த குடியிருப்புக்குள் ரத்தம் சொட்ட சொட்ட ஓடி உள்ளார்.
பிறகு ஏ பிளாக்கில் 9 நம்பர் வீட்டில் உள்ள தில்லை நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வீட்டுக்குள் நுழைந்தார். அப்பொழுது
தாமரை செல்வனை விடாமல் துரத்திச் சென்ற அந்த கொலையாளிகள் போலீஸ்காரரின் வீட்டுக்குள்ளேயே வைத்து தாமரைச்செல்வனை தலை கை, கால்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதனால் போலீஸ்காரரின் வீடு முழுவதும் ரத்தக்கரை படிந்திருந்தது.
மேலும் சாலையிலும் இரத்தம் உறைந்து கிடந்தது. இந்த சம்பவத்தில் காவலர் குடியிருப்பு பகுதியில் தடுக்கச் சென்ற அந்த கும்பல் வெட்ட முயன்றது, அங்கு இருந்த நாட்டில் இருந்த சில காவலர்கள் கல் / கட்டைகள் போன்ற பொருட்களை கொலையாளிகள் மீது வீசி எறிந்தனர் அதை பொறுப்பெடுத்தாமல் ஓடி சென்று செல்வராஜ் வீட்டுக்குள் நுழைந்த அந்த கும்பல் செல்வராஜையும் அரிவாளால் வெட்ட முயன்றது.இதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே ஓடி தப்பித்தார்.( செல்வராஜன் மனைவியும் மகளும் காவலர் குடியிருப்பில் காவலர் குடும்பத்திற்கு கூட பாதுகாப்பு இல்லை என்பதால் வீட்டை காலி செய்து விடுவோம் என புலம்பி கொண்டு இருந்தனர் )
தகவல் அறிந்த பாலக்கரை காவல் நிலைய போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட தாமரைச்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தகவல் அறிந்த வடக்கு மாநகர துணை போலீஸ் கமிஷனர் சிபின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை சம்பவம் குறித்து பாலக்கரை காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும்
கொலையாளிகளில் ஒரு நபரை பொதுமக்கள் உதவியுடன்
போக்குவரத்து காவல்துறை போலீசார் மடக்கி பிடித்து பாலக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.. பிடிபட்ட நபரின் பெயர் இளமாறன் . இவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பிரபல ரவுடி சதீஷ் என்பவர் தலைமையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது . தப்பிய சதீஷ், நந்து. பிரபாகரன். கணேசன் ஆகிய நான்கு பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் . இவர்கள் பிடிபட்ட பின்புதான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் .
இதற்கிடையில் கொலை செய்யப்பட்டார் தாமரை செல்வனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பிரேத கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது
.
இதற்கிடையில் தகவல் அறிந்து கொலை செய்யப்பட்ட தாமரை செல்வனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் , உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு குவிந்தனர் அங்கு ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த தாமரை செல்வனின்
உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
சம்பவம் நடந்த இடத்திற்கு மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு உள்தான் முதல்வர் தங்கி இருந்த சுற்றுலா மாளிகை பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . முதல்வர் உள்ள நேரத்தில் பட்டப் பகலில் உயிர் தப்ப போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்த வாலிபரை துரத்தி துரத்தி சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

