Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக மீது கடும் அதிருப்தியில் திருச்சி பர்மா அகதிகள் . காரணம் முழு விபரம் …

0

'- Advertisement -

யானை குளம்: இந்த இடம் வரலாற்று ரீதியாக யானைகள் குளிப்பாட்டப் பயன்படுத்தப்பட்ட குளத்தைக் குறிக்கிறது

 

திருச்சி சிங்காரத்தோப்பு யானை குளம் என்பது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி மற்றும் மாற்று இடமாற்றத்திற்கான திட்டத்துடன் தொடர்புடையது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில், பர்மா பஜார் கடைகள் சிங்காரத்தோப்புப் பகுதியில் உள்ள யானைக் குளத்தில் அமைக்கப்பட உள்ளதாக ஒரு அறிவிப்பு உள்ளது.

 

திருச்சி . சிங்காரத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த யானை குளம் பகுதி 1947 ல் பர்மா அகதிகளுக்காக ஒதுக்கப்பட்டது .

பின்னர் 1974இல் திருச்சி நகர மன்ற கூட்டத்தில் பர்மா அகதிகளுக்கு 118 கடைகள் கட்டித்தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியரால் அரசாணையும் வெளியிடப்பட்டது .

 

கடந்த 50 வருடங்களாக மாநகராட்சி வசம் உள்ள இந்த இடம் தற்போது மலைக்கோட்டை தெப்பக்குளம் சுற்றியுள்ள பர்மா பஜார் கடைகளுக்கு 95 கடைகள் யானை குடத்தில் கட்டித்தர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . இதில் 72 கடைகளை உண்மையான பர்மா பஜார் அகதிகளுக்கும் 23 கடைகள் பர்மா அகதிகள் அல்லாத பணம் படைத்தோருக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் .

 

தற்போது ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த ராணி பெட்ரோல் பங்க் இருந்த இடத்தை மார்வாடி சேட்டு ஒருவர் 99 வருட லீசுக்கு எடுத்துள்ளார் . இந்த இடத்தில் அவர் காம்ப்ளக்ஸ் கட்டவும் முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்.

 

இதனால் இவருக்கு இந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள பர்மா பஜார் பெட்டிகள் தொந்தரவாக இருப்பதாக கூறி மிகப்பெரிய தொகையை மாநகராட்சி நிர்வாக அமைச்சருக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து இத்துறை அமைச்சரே உடனடியாக தெப்பக்குளம் சுற்றியுள்ள பெட்டிகளை அகற்றி அவர்களுக்கு யானை குளத்தில் கட்டித்தர கூறி நேரடியாக களத்தில் இறங்கி உள்ளார் .

 

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் பெரும் மண்டை காய்ச்சலில் உள்ளனர் . ஏனென்றால் யானை குளம் பகுதியை முறைப்படி அளக்க வேண்டும் , யார் யாருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற நீதி மன்ற நகலை பார்த்து அவர்களுக்கு தான் கடை ஒதுக்க வேண்டும் என்ன செய்வது என தெரியவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது .

 

ஒரு அமைச்சரே மார்வாடியிடம் விலை போய் விட்டாரே! 50 வருடமாக காத்திருந்த நம்மில் யார் யாருக்கு தான் கடை கிடைக்கப் போகுதோ என சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பர்மா வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்களாம் .

 

குறிப்பு:- யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக பணியாற்றி வரும் மாநகராட்சி ஆணையர் இந்த யானை குளம் இடம் , என்ன ஏது என முழுமையாக விசாரித்து நியாயமாக பர்மா அகதிகளுக்கு , இந்த கடைகள் கிடைக்க உதவுவார் , யானை குளம் உள்ள இடத்தில் முறைப்படி கடைகள் கட்டி முடிக்கும் வரை தெப்பக்குளம் சுற்றியுள்ள பர்மா பஜார் கடைகள் அங்கேயே செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் நம்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.