திருச்சி பொன்மலையில்
கட்டிலில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை பலி
போலீசார் விசாரணை
திருச்சி பொன்மலை எக்ஸ் சர்வீஸ்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் தரம்சிங் மீனா (வயது 30). இவர் பொன்மலை ரயில்வே கோட்ட மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரிகிறார். தரம்சிங் மீனாவின்
சகோதரர் ராஜேஷ் குமார் மீனா. அவரது குழந்தை பாரி மீனா (வயது 2).

இந்தக் குழந்தை கடந்த ஒரு மாதமாக தரம்சிங் மீனாவின் வீட்டில் இருந்தது.
சம்பவத்தன்று அவர்கள் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பாரி மீனா உருண்டு படுத்தபோது தவறி கீழே விழுந்து உள்ளது.
.இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடியது குழந்தை.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரைப் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினார்..
இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

