சிறுவனுக்கு தொடர்ந்து காது வலி! மற்றும் விசித்திரமான சத்தம்! பரிசோதித்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
நாம் அன்றாட உடல் நல குறைகளை லேசாக எடுத்துக்கொள்வது பல நேரங்களில் பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில், கம்போடியாவில் நடந்த ஒரு சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
‘
புனோம் பென்னில் வசிக்கும் சிறுவன் ஒருவர் தொடர்ச்சியாக காது வலி மற்றும் விசித்திரமான சத்தம் கேட்கிறது எனக் கூறியதையடுத்து, குடும்பத்தினர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலில் மருத்துவர்கள் இதை ஒரு சாதாரண காது தொற்று என சந்தேகித்தனர்.
ஆழமான பரிசோதனையின் போது, குழந்தையின் காதுக்குள் ஒரு உயிருடன் இயங்கும் கரப்பான் பூச்சி சுருண்டு நகர்வதை மருத்துவர் கண்டறிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பூச்சி இன்னும் உயிருடன் இருந்ததால், அதை பிரித்தெடுக்கும் பணியும் மிகுந்த சவாலானதாக இருந்தது.
மருத்துவர் நேர்கொண்ட சவால்:
மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ செயல்முறையின் மூலம் அந்த கரப்பான் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
இந்த சம்பவம் சிறுவர்களின் உடல் நல குறைகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதைக் கடுமையாக நினைவூட்டுகிறது.
சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகும் இந்த சம்பவம், சிறுவர்களின் உடல் நல பாதுகாப்பில் பெற்றோரின் விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதை வெளிப்படுத்துகிறது.
 
						
 
						
