என்னால் திமுகவுக்கும், தலைவருக்கும் எப்பொழுதும் எந்த கெட்ட பெயரும் வராது திருச்சியில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் :
என்னால் திமுகவுக்கும், தலைவருக்கும் எப்பொழுதும் எந்த கெட்ட பெயரும் வராது
திருச்சி கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பணி
ஒன்றிய செயலாளர்களுக்கான பணி என்ன ?என்பதை அச்சிட்டு வழங்க உள்ளனர்.
கிராமங்களில் 2002 வாக்காளர் பட்டியலையும், நகரங்களில் 2005 வாக்காளர் பட்டியலையும் நாம் கையில் வைத்துக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளை பார்க்க வேண்டும்.
வடமாநிலத்தைச் சேர்ந்த நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வட மாநிலத்தவர்கள் மூன்று மாதங்களில் ஒரே இடத்தில் தங்கியிருந்தால் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க முடியும். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
ஆனால் அவர்கள் இடம் மாறிக் கொண்டே இருப்பார்கள் .
ஆகவே அவர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது என அப்ஜெக்ஷன் கொடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் ஓட்டை தவிர்க்க பார்ப்பார்கள்.
அதில் ஒரு ஓட்டு கூட விட்டு விடாமல் பார்க்க வேண்டும். அது நம்முடைய கடமை.
நமக்கு யார் யாரெல்லாம் வாக்களிக்கிறார்களோ? அவர்களை எல்லாம் தவிர்ப்பதற்கு தேர்தல் அலுவலர்கள் திட்டமிட்டால் தடுக்க வேண்டியது நமது கடமை.
100, 200 வாக்காளர்களை மொத்தமாக சேர்த்தால் அதை நாம் தவிர்க்க வேண்டும்.
பெண்களுடைய வாக்குகள் ஒன்று கூட தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நம்முடன் வருவார்கள் என பழனிச்சாமி பேசிக்கொண்டே இருந்தார்.
ஆனால் எந்த கட்சியும் இங்கிருந்து செல்லவில்லை. ஆகவே திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த
பாமக இரண்டாக பிளந்து உள்ளது.
தேமுதிகவின் நிலைப்பாடு தெளிவாகவில்லை.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் அது பொருந்தாத கூட்டணியாக உள்ளது. இது நமக்கு
மிகப்பெரிய சாதகம் .அதை மேலும் சாதகமாக மாற்ற பார்க்க வேண்டும்.
ஏதேதோ பொய்யான குற்றச்சாட்டுகளை நம் மீது சுமத்துகிறார்கள் .
என்னால் இந்த இயக்கத்துக்கும்,திமுக தலைவருக்கும் எப்பொழுதும், எந்த கெட்ட பெயரும் ஏற்படாது.
இவ்வாறு அமைச்சர் கே என் நேரு பேசினார்.
இக்கூட்டத்தில்
எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன் ,ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன்,முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, பரணி குமார்,மாவட்ட பொருளாளர் துரைராஜ்,
மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,மத்திய மாவட்ட முன்னாள் துணை செயலாளர் குடமுருட்டி சேகர்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ் கமால் முஸ்தபா ,நாகராஜன் காஜாமலை விஜய்,ராம்குமார்,வக்கீல் இளங்கோ,
மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம் ,புத்தூர் தர்மராஜ்,வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர். சிங்காரம், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் முள்ளிப்பட்டி பால்ராஜ்,
வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,முன்னாள் பகுதி செயலாளர் தில்லைநகர் கண்ணன்,
மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ் , வாமடம் சுரேஷ், மார்சிங் பேட்டை செல்வராஜ்,தனசேகர்,பி ஆர் பி பாலசுப்ரமணியன்,
கவுன்சிலர்கள் ராமதாஸ் புஷ்பராஜ் மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புங்கனூர் தாமோதரன்,
நிர்வாகிகள் பிராட்டியூர் மணிவேல்,மின்வாரியம் சோலை பாஸ்கர், என்ஜினியர் நித்தியானந்தம்,அரவானூர் தர்மராஜன் ,சர்ச்சில், கிங்,கருத்து கதிரேசன்,
அபூர்வமணி, எம் ஆர் எஸ் குமார், ராஜ்குமார் உள்பட
மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்க.ள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
. கூட்டத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 
						
 
						
