வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேருவை எதிர்த்து அதிமுக பத்மநாபன் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெறுவார் . காரணம்…..
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.என்.நேரு.
இந்த மேற்கு தொகுதி உருவாக்கப்பட்ட 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த மரியம் பிச்சை வெற்றி பெற்றார். ஆனால் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 2011-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த பரஞ்ஜோதி வெற்றி பெற்றார். இரண்டு தேர்தல்களிலும் திமுக சார்பில் கே என் நேரு போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார்.
2016 நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஆர். மனோகரனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் .
2021 இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருமண்டபம் பத்மநாதனை எதிர்த்துப் போட்டியிட்டு 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்) அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வருகிறார் .
தற்போது திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள 23 வார்டுகளிலும் உள்ள நிர்வாகிகளை அமைச்சர் கே என் நேரு சிறப்பாக கவனித்து வருவதால் மீண்டும் அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் மேற்குத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக திமுகவினர் உறுதியாக கூறுகின்றனர் .
மேற்கு தொகுதியில் பூத் வாரியாக , வட்டம், பாகம்,பகுதி திமுக நிர்வாகிகள் திமுக (கே.என்.நேரு.) வெற்றி பெற கடுமையாக உழைத்து வருகின்றனர் .
இதனால் அவரை எதிர்த்து மேற்கு தொகுதியில் போட்டியிட பலரும் தயங்கி வரும் நிலையில் கடந்த தேர்தலில் நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்விய தழுவி அடைந்தாலும் இம்முறை நேருவை எதிர்த்து போட்டியிட கருமண்டபம் பத்மநாதன் தயாராக உள்ளார் . மேலும் தனக்கு மீண்டும் மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனவும் கூறி உள்ளார் .
கருமண்டபம் பத்மநாதன் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். மாணவரணி, இளைஞர் அணி மாவட்டச் செயலாளராக பணியாற்றி தற்போது மாநகர மாவட்ட துணை செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார் .
கடந்த தேர்தலில் மேற்கு தொகுதியில் நான் வெற்றி பெற பகுதி செயலாளர்கள் கலைவாணன், நாகநாதர்பாண்டி
எம் ஆர் ஆர் முஸ்தபா , பூபதி , அணி செயலாளர்கள், வட்ட செயலாளர் அதிமுக தொண்டர்கள் என அனைவரும் எனது வெற்றிக்காக சிறப்பான கடுமையான களப்பணிகள் மேற்கொண்டனர் . ஆனால் ஒரு சில காரணத்தினால் வெற்றி பறி போனது . ஆனால் இம்முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் . என்னை எதிர்த்து போட்டியிடுபவர் யார் என்பது முக்கியமல்ல அவர் எவ்வாறு களப்பணியாற்றுகிறார் என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் களப்பணி ஆற்றி உறுதியாக வெற்றி பெற முடியும் ( ஏனெனில் ஏற்கனவே இதே தொகுதியில் இரண்டு முறை நேரு தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ) என கருமண்டபம் பத்மநாதன் கூறியுள்ளார் . பத்மநாதன் கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர் மேற்கு தொகுதி கிறிஸ்தவர்கள் அடுத்தபடியாக கள்ளர்கள் தான் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இது குறித்து மேற்கு தொகுதி அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டபோது இரண்டு முறை நேரு வெற்றிஇந்த முறை பெற்றுள்ளார் . குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு குடியிருப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை சவாலாகவே இருக்கின்றன தவிர அவர் மீது எந்த குறையும் இந்த முறை அதிமுகவை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் கூறினர் .
கடந்த முறை மேற்கு தொகுதியில் அதிமுக எளிதாக வெற்றி பெற்று இருக்கக்கூடும், ஆனா அப்போது மாவட்ட செயலாளராக இருந்த வெல்ல மண்டி நடராஜன் நீ எப்படியும் தோற்கத்தான் போகிறாய் என கடைசி நேரத்தில் நிர்வாகிகள் , பொறுப்பாளர்கள் மற்றும் பூத்தில் அமரும் தொண்டர்கள் என யாருக்கும் தேர்தல் செலவு பணம் தரவில்லை . இதுதான் அதிமுக வேட்பாளர் பத்மநாதன் தோல்விக்கு காரணமாக அமைந்தது . தற்போது மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் பத்மநாதனுக்கு ஆதரவாக உறுதியாக உள்ளதால் மீண்டும் பத்மநாதனுக்கு சீட்டு கிடைத்தால் வெற்றியை பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காணிக்கை ஆக்குவோம் என அதிமுக தொண்டர் ஒருவர் கூறினார் .
( அடுத்த பதிவில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் விபரம் . மேலும் பொதுமக்களின் கருத்து.)