துப்புரவு பணியாளர்கள் மற்றும் மகளிர் அணியினருக்கு தீபாவளி பரிசுடன் வாழ்த்து தெரிவித்த திமுக வட்டசெயலாளர் செந்தில்குமார்.
திருச்சி தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழியின் அறிவுறுத்தலின்படி 20வது வட்ட செயலாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில் 20வது வார்டில் உள்ள அனைத்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் 20ஏ வட்ட மகளிர் அணியினருக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வில் வட்ட அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் , துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வி, அன்பரசன், முரளி கிருஷ்ணன் , வட்டப் பிரதிநிதிகள் வெங்கடேசன், ராதாகிருஷ்ணன் , வரதராஜன். ராஜா , ஜகாங்கீர் திரளாக கலந்து கொண்டனர் .