Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுமக்களுக்காக கூட்டுறவு வங்கியை தொடர்ந்து திருவெறும்பூரில் தினசரி உழவுர் சந்தை அமைக்க கோரி அமைச்சரிடம் மனு அளித்த அமைச்சர் மகேஷ் .

0

'- Advertisement -

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்

எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட, கணேஷ் நகர்,உய்யகொண்டான் வாய்க்கால் கரைப்பகுதியில், அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தில் திருவெறும்பூரை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினசரி உழவர் சந்தை ஒன்றை அமைத்து தர ஆவண செய்யுமாறு கோரிக்கை மனுவை அளித்தார்‌.

ஏற்கனவே திருவெறும்பூர் தொகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கி அமைய வேண்டுமென கூட்டுறவு துறை அமைச்சரிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் மகேஷ் மனு அளித்தார் அதனை தொடர்ந்து கடந்த வாரம் திருச்சி காட்டூரில் இருதயபுரம் கூட்டுறவு வங்கியின் கிளை காட்டூரில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

 

தொடர்ந்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களுக்காக பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இது திருவெறும்பூர்  பொதுமக்கள் இடையே பெரும் வரவேேற்பை பெற்று உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.