Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விபச்சாரத்தில் 14 வயது மாணவி. பிரபலங்களிடம் அனுப்பி பல லட்சம் அள்ளிய காமெடி நடிகர், திமுக பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் சட்டத்தில் கைது .

0

'- Advertisement -

சென்னை கோயம்பேட்டில் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் லாட்ஜில், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

 

அப்போது அங்கிருந்த ரூமில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் பிடிபட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். .

இந்த மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திர மாநில துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் குமார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு மாணவியை எதற்காக விபச்சாரத்தில் தள்ளினீர்கள்? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது பல பகீர் தகவல்கள் வெளியாகின

அதாவது, மாணவியின் அப்பா திடீரென இறந்துவிட்டதால், அவரது அம்மா இன்னொருவரை 2வது திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டாராம். இதனால் தனிமையில் சிக்கிய மாணவி, எங்கே போவது? என்ன செய்வதென்றே தெரியாமல், கே.கே.நகரில் உள்ள, தன்னுடைய அம்மாவின் தோழி பூங்கொடி என்பவரின் வீட்டில் சென்று தங்கியிருக்கிறார்.

 

இந்த பூங்கொடி என்பவர், சினிமாவில் கிளப் டான்சர் ஆவார்.. மாணவியின் நெருக்கடி நிலைமையை அறிந்து, ஆசை வார்த்தை சொல்லி, விபச்சாரத்திலும் தள்ளியிருக்கிறார் பூங்கொடி

 

ஆரம்பத்தில் இதற்கு மாணவி மறுத்துள்ளார்.. ஆனாலும், காஸ்ட்லி டிரஸ், ஐபோன், பணம் போன்ற பரிசு பொருட்களை தந்து, மாணவியை பணிய வைத்துள்ளார். இதற்கு மாணவியின் பெரியம்மா மகளான ஐஸ்வர்யா என்பவரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

 

இதற்கு பிறகு மாணவி, முழு நேர விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, வசதிபடைத்த கஸ்டமர்களிடமிருந்து, லட்சக்கணக்கில் பணத்தை சம்பாதித்தாராம் பூங்கொடி.. இந்த வசதி படைத்த கஸ்டமர்களை பூங்கொடிக்கு அறிமுகம் செய்து வைத்தது சினிமா காமெடி நடிகருமான பாரதி கண்ணன் என்பது தெரியவந்துள்ளது..

 

இதையடுத்து, கோயம்பேடு மகளிர் போலீசார், பாரதி கண்ணனிடமும் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போது நடந்த சம்பவம் அனைத்தும் உண்மை என்று நிரூபணமானதால், பூங்கொடி, ஐஸ்வர்யா, பாரதி கண்ணனை மகளிர் போலீசார் கைது செய்தனர்… மேலும்,உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த கட்டுமான நிறுவன ஊழியர் மகேந்திரன், திமுக நிர்வாகி ரமேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்..

 

மேலும், கைதான பாரதி கண்ணன், மகேந்திரன், ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கும் செய்யப்பட்டு உள்ளது.. இவர்களது செல்போன் நம்பர்களை வைத்து, அவர்களை பிடிக்கவும் திட்டமிட்டு வருகிறார்கள்.. அத்துடன், பூங்கொடிக்கு அறிமுகமான பிரபலங்கள் யார் யார்? என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

 

பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் தள்ளி பலருக்கு விருந்தாக்கிய வழக்கில் காமெடி நடிகர் பாரதி கண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

 

இந்நிலையில் சினிமா இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது தான் இல்லை என்று கூறியிருக்கிறார்.. அத்துடன், மிக நீண்ட விளக்கத்தையும் இயக்குனர் பாரதிகண்ணன் தெரிவித்துள்ளார்.

 

அந்த வீடியோவில், “நான் அருவா வேலு, கண்ணாத்தாள், திருநெல்வேலி, பண்ணாரி அம்மன், கரகாட்டக்காரி உள்ளிட்ட 10க்கும் அதிகமான படங்களை இயக்கி உள்ளேன்.

 

பாரதி கண்ணன் என்ற துணை நடிகர் பாலியல் வழக்கில் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார்? என்று எனக்கு தெரியாது. ஆனால் சிலர் பெயரை தவறாக புரிந்து கொண்டு, சோஷியல் மீடியாவில் அந்த செய்திக்கு என்னுடைய போட்டோவுடன் செய்தி பிரசுரம் செய்திருக்கிறார்கள்.. நான் வேறு, அந்த பாரதி கண்ணன் வேறு.

இப்படி தவறான செய்தி என் படத்துடன் வெளியானதால் என் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.. என் மீது இதுவரை எந்த அவதூறுகளும் வந்ததில்லை. அந்த வழக்கிற்கும் எனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. செய்தியை தவறாக வெளியிட்டவர்களும் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள்.. எனவே, நான் தான் கைதாகினேன் என மக்கள் நினைத்துவிட கூடாது” என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.

திமுக முன்னாள் நிர்வாகியான ரமேஷ், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள உளுந்தை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராவார். மேலும் இவர் முதல்வர் ஸ்டாலினின் பண்ணை வீட்டையும் பராமரித்து வந்தார். ஆனால் அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை அறிந்து பண்ணை வீட்டை பராமரிக்கும் பொறுப்புகளில் இருந்து ரமேஷ் அப்புறப்படுத்தப்பட்டார்.

இதனிடையே தலைமறைவாக இருந்த உளுந்தை ரமேஷ் மற்றும் பாரதி கண்ணண் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறினர்.

பள்ளி மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் விசாரணை நீண்டு கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது..

 

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.