புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 2ம் கட்ட தலைவர்களை நீக்கி, அப்பா எஸ்.ஏ.சியை உள்ளே கொண்டு வாருங்கள் விஜய்க்கு வந்த முக்கிய கோரிக்கை.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விஜய்க்கு நெருக்கமான சிலர் வைத்து உள்ளார்களாம்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. டஜன் கணக்கில் கட்சிக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு உள்ளது. கட்சியின் தலைவர் விஜய் கூட கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதை எல்லாம் சமாளிக்க வேண்டிய வேண்டிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகி உள்ளார்.
இந்த விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டியது பொதுச்செயலாளர் கடமை. ஆனால் அதே புஸ்ஸி ஆனந்த் இந்த விவகாரங்களை எதிர்கொள்ளாமல் தலைமறைவாகிவிட்டார். தனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதில் அறிவிப்பு வரும் வரை தலைமறைவாக்வே அவர் இருப்பார் என்று கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் நிர்மல் குமார் தலைமறைவாக உள்ளார். இது போக ராஜ் மோகன், ஜான் ஆரோக்கியசாமி, அருண் ஆகிய தலைவர்களும் தலைமறைவாகி உள்ளார். லயோலா மணி சில போஸ்டுகளை போட்டாலும் அதை டெலிட் செய்து கட்சிக்கு மேலும்ந சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.
கலவரத்தை தூண்டும் விதமாக போஸ்ட் செய்த ஆதவ் அர்ஜுனா தற்போது டெல்லியில் இருக்கிறார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அவரை சும்மா விடக்கூடாது. அவரை வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற பென்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் கட்சி மொத்தமாக அல்லோகலப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விஜய்க்கு நெருக்கமான சிலர் வைத்து உள்ளார்களாம்.
அதாவது இரண்டாம் கட்ட தலைவர்களை மொத்தமாக நீக்குங்கள் விஜயகாந்த், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு வலுவான இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்தனர். அதேபோல் நல்ல இரண்டாம் கட்ட தலைவர்களை களமிறக்குங்கள். அதுதான் சரியாக இருக்கும். இவர்களுக்கு அரசியல் தெரியாது. இவர்கள் இருந்தால் விஜய் அரசியல் செய்ய முடியாது என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
அதோடு உங்கள் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இவர்களை பற்றி ஏற்கனவே எச்சரித்து இருந்தார். முக்கியமாக புஸ்ஸி ஆனந்த் சரி இல்லை என்று ஏற்கனவே எஸ்.ஏ சந்திரசேகர் எச்சரித்து இருந்தார். அவர் சொன்னதை விஜய் கேட்க வேண்டும். இவர்களை வெளியே அனுப்ப வேண்டும். கட்சிக்கு உள்ளே எஸ்.ஏ சந்திரசேகர் கொண்டு வரப்பட வேண்டும்.
தனது அப்பாவுடன் விஜய் நெருக்கம் ஆக வேண்டும். எஸ்.ஏ சந்திரசேகர் அரசியல் தெரிந்தவர். ஒரு காலத்தில் திமுகவுடன் நெருக்கமாக இருந்தவர். அவருக்கு அரசியல் நெளிவு சுளிவுகள் தெரியும். அதனால் அவருடன் விஜய் மீண்டும் சேர வேண்டும். இது மட்டுமே விஜய்க்கு சரியாக இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்து உள்ளார்களாம். இதனால் இரண்டாம் கட்ட தலைவர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விஜய்க்கு நெருக்கமான சிலர் வைத்து உள்ளார்களாம்.