கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பினா்.
கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இவா்கள் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் வெள்ளிக்கிழமை வரை 105 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் குணமடைந்த நிலையில் நேற்று சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஆனால், திருச்சி – மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பேரும், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனயில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.