திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் செல்வப் பெருந்தகை உருவப்படத்தை செருப்பால் அடித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரத்தினவேல் , ஆவின் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கைது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவமதித்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகே எடப்பாடி உருவப்படத்தை செருப்பால் அடித்த காங்கிரஸ் நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும்
நேற்று வெள்ளிக்கிழமை மாலை திருச்சி சிங்காரத்தோப்பு அருகே உள்ள மாவட்ட மைய நூலகம் அருகே அருகே அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செல்லாத பெருந்தகையாய் ஆகிவிட்டார் என கோஷம் எழுப்பி அவரது உருவ படத்தை செருப்பு, , துடைப்பம் உள்ளிட்டவற்றை கொண்டு அடித்து கோஷமிட்டனர்.
தொடர்ந்து செல்வப்பெருந்தகை உருவ படத்தை தீயிட்டு கொளுத்த அதிமுகவினர் முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டை காவல் நிலைய போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிமுகவினர் காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றம் வழியாக அழைத்து சென்ற போது, அங்கு நின்று கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியினர் போலீசார் வாகனங்கள் மீது கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி. ரத்தினவேல் , அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் , அதிமுக மாமன்ற குழு தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி , அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் சிந்தை முத்துக்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் டி.ஆர், சுரேஷ்குமார், ஐடி பிரிவு வெங்கட் பிரபு , இலக்கிய அணி பாலாஜி , பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி , மலைக்கோட்டை அன்பழகன், எம் ஆர் ஆர் முஸ்தபா , கலைவாணன் , ரோஜர் , கலைப்பிரிவு இணை செயலாளர் எம்.பி.வி. ஆனந்தன்,.வட்ட செயலாளர் டி.எஸ்.எம்.செல்வமணி , வழக்கறிஞர்கள் சேது மாதவன், கௌசல்யா, ஜெயஸ்ரீ, எடத்தெரு எம்.கே.குமார் , வி.பி.எஸ்.மகா, முகமது இஸ்மாயில் ,