கரூரில் 34 பேர் உயிரிழப்பு சி.எம். சார் சொன்னிங்களே செஞ்சீங்களா ?எனக்கேட்ட விஜய் அவர்களே நீங்களும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா போன்று செய்வீர்களா ? என தமிழக மக்கள் கேள்வி
இந்த மாதம் திருச்சியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதன்முறையாகப் பிரச்சாரம் செய்த நிலையில் கடந்த வாரம் நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயின் பிரபலம் அவருக்கு அதிக அளவிலான கூட்டத்தைச் சேர்த்தது. அன்றைய நாள் முழுவதும் ஏன் ஒரு வாரத்திற்கு விஜய் குறித்த செய்திகள்தான் ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது.. அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொண்டார்..
அதனைத் தொடர்ந்து இரவு தாமதமாக கரூரில் பொது மக்களிடையே தனது உரையை தொடங்கினார் . ஏராளமான பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை காண குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது .
இந்த நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 19 பெண்கள். 9 ஆண்கள் என மொத்தம் 34 பேர் இதுவரை பலியானதாக கூறப்படுகிறது . மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் கரூர் அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் மருத்துவமனையில் வரிசையாக இறந்தவர்களின் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை கதறல் சத்தம் .கரூர் மருத்துவமனை இன்றி கரூரே கண்ணீரில் மிதந்து வருகிறது .
போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் மற்ற மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார் .
தற்போது தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல்துறை உயர் அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் உள்ளனர் .
இந்த துயர சம்பவம் குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து உள்ளனர் .
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான, புஷ்பா – 2: தி ரூல் திரைப்படம் கடந்த டிசம்பர் 5ல் வெளியானது. ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தின் சிறப்பு காட்சி டிச., 4ல் திரையிடப்பட்டது. திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுனும் தியேட்டருக்கு வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நடிகர் அல்லு அர்ஜுனாவை பார்க்க வந்த ரேவதி, (வயது 35,) என்ற பெண் உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன், ஜாமினில் வெளியே வந்தவுடன் உயிர்இழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கினார் .
இதேபோன்று தற்போது கரூரில் நடிகர் விஜயை காண வந்து உயிர் இழந்த 34 பேர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் வழங்குவாரா ?
பொதுக் கூட்டங்கள் பிரச்சாரங்கள் என பேசும் இடங்களில் எல்லாம் சி.எம். சார் சொன்னிங்களே செஞ்சீங்களா ?எனக்கேட்ட விஜய் அவர்களே நீங்களும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா போன்று செய்வீர்களா ? என தமிழக மக்கள் கேள்வி .