மோசடி புகாரை வாபஸ்
பெற கூறி திருச்சி பாலக்கரையில் வழக்கறிஞர் மீது தாக்குதல் .
பாலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை.

திருச்சி செந்தண்ணீர்புரம் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 43 )வழக்கறிஞர். இவர் கடந்த 2018 அல்லது புத்தூர் பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவருக்கு
ரூ.10 லட்சம் கடன் கொடுத்தார். பின்னர் அவர் அந்த தொகையை திரும்ப செலுத்தவில்லை.
அதைத்தொடர்ந்து அமுதா மீது அருண்குமார்
நீதிமன்றம் மூலமாக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இதை அறிந்த அமுதாவின் உறவினர் வினோத்குமார் ஆத்திரமடைந்தார் .
இந்த நிலையில் சம்பவத்தன்று எடத்தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த அருண்குமாரிடம் வழக்கை வாபஸ் பெற சொல்லி மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது .
இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வினோத்குமார் மீது பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

