அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்து பூத் பாக கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப. குமார் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் ப.. குமார் முக்கிய ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார் .
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன், ராவணன், SKD.கார்த்திக், அருணகிரி, நகர செயலாளர் S.P.பாண்டியன், பகுதி செயலாளர் பாஸ்கர் கோபால்ராஜ், தண்டபாணி, பேரூர் செயலாளர்கள் பி.முத்துக்குமார், ஜெயசீலன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜமணிகண்டன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் தாமஸ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர் அன்பு செழியன், மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் பாலமூர்த்தி, பண்ணையார் பிரேம்குமார், கோகூர் முத்துக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்னகுமார், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி நிர்வாகிகள், முன்னாள் கூட்டுறவு பிரதிநிதிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகள் அதிமுக தொண்டர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.