Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை.

0

'- Advertisement -

மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த

2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை.

 

திருச்சி நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு.

 

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா ஊனையூர் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

இவரது மகள் சுபா ( வயது 32 ) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

மாற்றுத்திறனாளி .

 

இவர் கடந்த 6,-7- 2022 அன்று ஊனையூர் மூவராயன் குளப் பகுதியில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மருங்காபுரி கண்ணுக்குழி நடுவிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெல்டர், பிரகாஷ் (வயது 25 )அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் (வயது 25) ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து அவரை அங்குள்ள

புதருக்குள்

தூக்கிச் சென்று ரமேஷ் அவரை பிடித்துக் கொள்ள பிரகாஷ் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார் .

மகளின் அலறல் சத்தம்

ஓடி வந்த அவரது தந்தை பிரகாசை அவர்கள் இருவரும் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர் .

 

இது குறித்து மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை காவல் நிலைய போலீசார் பிரகாஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல்

நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .

 

இந்த வழக்கில் நீதிபதி

பி.ஸ்வாமிநாதன் இன்று தீர்ப்பளித்தார். ‘

 

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு வாலிபர்களுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் கே.பி.சக்திவேல் அரசு வழக்கறிஞராக ஆஜரானார்…

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.