அண்ணாவின் 117-வது பிறந்த நாள் விழா: அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அழைப்பு.
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான
ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க…

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-வது பிறந்த நாளான 15.9.2025, திங்கட்கிழமை அன்று காலை 10.30 அளவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியிட மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி நிர்வாகிகள், முன்னாள் கூட்டுறவு பிரதிநிதிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகள், கழக தொண்டர்கள், அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

