Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற மணமகன் தோழனுடன் சம்பவ இடத்திலேயே பலி.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 2வது திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வாலிபர் தோழனுடன் சம்பவ இடத்திலேயே பலி.

 

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் தொட்டியம் தாலுகா வரதராஜபுரம் பிரிவு சாலையில் வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள் .

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, சென்னார்பட்டி, மூலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் மோகன்ராஜ் (வயது 27)

செல்வம் மகன் தினேஷ் (வயது 28)

ஆகிய இருவரும் சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள ஹாலோ பிளாக் கடையில் வேலை செய்து வருகின்றனர்.

 

இந்த சாலை விபத்தில் இறந்த மோகன்ராஜ் என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டார் .

 

நேற்று இரவு இரண்டாவது திருமணம் செய்வதற்காக பெண் பார்க்க சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடைபெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து விட்டனர் . சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தொட்டியம் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இது குறித்து தொட்டியம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.