திருச்சி அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமைச்சர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
திருச்சி அதிமுக மாநகர மாவட்ட முன்னாள் மாணவரணி செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் 200 க்கும் மேற்பட்ட திருச்சி மாநகர அஇஅதிமுக உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை சந்தித்து திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு. மதிவாணன், பகுதி செயலாளர் ஆர்.மோகன், வட்ட செயலாளர் எஸ். சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் கே.பன்னீர்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.