சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருட்டு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆரம்ப விசாரணையில் சாதாரண திருட்டு என கருதப்பட்ட இந்த வழக்கில், ஆழ்ந்த விசாரணையின்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி தொடர்புடையவர் என போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் உள்ளூராட்சி தலைவர் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது, அப்பகுதியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பாரதியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.