Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருமணமான 3.வது மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகம். புது மாப்பிள்ளை பரிதாப பலி.

0

'- Advertisement -

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த பரசுராம் என்பவர் மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காயத்ரி கோபித்துக்கொண்டு அவர் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். புதுமாப்பிள்ளை பரசுராம் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த சுதாகர் என்பவருடைய மகன் பரசுராமுக்கு (வயது 20). இவர் கூலி தொழிலாளியார். பரசுராம், மன்னார்குடி அருகே உள்ள ராமபுரம் தெருவை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

 

காயத்ரி பரசுராம் தம்பதி இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆகி 3 மாதங்கள் கூட ஆகாத நிலையில், கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் புதுப்பெண் காயத்ரி கோபித்துக்கொண்டு அவர் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

 

மன உளைச்சலில் இருந்த பரசுராம் சம்பவத்தன்று இரவு வடகோவனூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புதுமாப்பிள்ளை பரசுராம் லெட்சுமாங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். கோரையாறு பாலம் அருகே சாலையில் சென்ற போது எதிரே வந்த அரசு பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

 

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பரசுராமை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரசுராம் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.