நீட் தேர்வுக்கு நோ சொல்லும் அரசு டெட் தேர்வுக்கு எஸ் சொல்ல கூடாது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. மாநில தலைவர் சி.அரசு
மாநில பொதுச் செயலாளர்
சு குணசேகரன், மாநில பொருளாளர்
சே நீலகண்டன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நீட் தேர்வுக்கு நோ சொல்லும் அரசு டெட் தேர்வுக்கு எஸ் சொல்ல கூடாது.
தமிழ்நாடு அரசின் எந்த துறையிலும் இல்லாத அதிசயமாக பணியில் நீடிக்க வேண்டும் என்றால் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.
வருவாய்த் துறையிலோ சுகாதாரத் துறையிலோ நீதித்துறையிலோ காவல்துறையிலோ பதவி உயர்வுக்கு துறை தேர்வுகள் எழுத வேண்டிய அவசியம் உண்டா?. ஆனால் ஆசிரியர்களுக்கு மட்டும் இருக்கும் பணியிலேயே நீடிப்பதற்கு ஏன் தகுதித்தேர்வு? எந்த அவசியமும் கிடையாது.
உரிய கல்வித் தகுதியில் பயின்று, பணியில் சேர்ந்து, பல ஆண்டுகள் செம்மையாக பணியாற்றிய பிறகு ஆசிரியர்களுக்கு மட்டும் பணியில் நீடிப்பதற்கே தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற தீர்ப்பு மிகுந்த வேதனை அளிக்கின்றது.
மற்ற எந்தத் துறைக்கும் இல்லாத இந்த சோதனை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்?
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அந்த மதிப்பெண்ணை வைத்தே மருத்துவ கல்விக்கு இடம் அளிக்க வேண்டியது தானே எதற்கு தனியாக ஒரு நீட் தேர்வு என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு.
ஆசிரியர்களுக்கு மட்டும் பணியில் சேர்ந்த பிறகு எதற்காக இந்த தகுதி தேர்வு?
தமிழ்நாடு அரசு உடனடியாக தனது நிலைப்பாட்டை உறுதி செய்து இதற்கான ஒரு தீர்வை பெற்றிட வேண்டும். இந்த தீர்ப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய கௌரவ பிரச்சனையாக அமையும்.
லட்சக்கணக்கான ஆசிரியர்களின் ஆதரவை பெற்று அமைந்த அரசு ஆசிரியர்களின் அடிமடியிலேயே கை வைக்கும் இந்த தீர்ப்பை சீராய்வு செய்தோ அல்லது கொள்கை முடிவாக அறிவித்தோ ஆசிரியர்கள் நலனை காக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேண்டுகோள்..