எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை : மாநகர
அதிமுகவினர் மீது 11 வழக்குப் பதிவு
போலீசார் நடவடிக்கை.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாள் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்.
இதைமுன்னிட்டு
மாநகரின் பல்வேறு இடங்க ளில் பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டி ருந்தன.இந்த பிளக்ஸ் பேனர்கள் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்புஅதிமுக நிர்வாகிகள் வைக்க தொடங்கினர்.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி பிளக்ஸ் பேனர்களை அகற்றுமாறு
போலீசார் அறிவுறுத்திருந்தனர். இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர்களை கழற்றி வைத்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி 23ந்தேதி திருச்சி வருவதற்கு முதல் நாள் 22 ந்தேதி திருச்சி மாநகர முழுவதும் பரவலாக பிளக்ஸ் பேனர்களை வைத்தனர்.
இதனை போலீசார்
அனுமதியில்லாமல் பிளக்ஸ் பேனர்கள் வைத்த தாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 2 வழக்குகள், கன்டோன் மென்ட் காவல் நிலையத்தில் 7 வழக்குகள், உறையூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் என மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது.