Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளியின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் ஓவிய கண்காட்சி .

0

'- Advertisement -

 

வரலாறு மக்களின் உரிமை வரலாற்றை தவிர்க்க முடியாது.

முதன்மை விருந்தினர் மேனாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன்.

திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம்

ஓவிய கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்கியா குளிர் அரங்கில் நடைபெறுகிறது.

 

ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார் . முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார்.

முதன்மை விருந்தினர் மேனாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கண்காட்சியினை திறந்து வைத்து பேசுகையில்,

வரலாறு மக்களின் உரிமை வரலாற்றை தவிர்க்க முடியாது கடந்த கால பெருமையை பேசுவது மட்டுமல்லாமல் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் திட்டமிட வரலாறு வழிவகுக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கூற்றின் படி இளம் தலைமுறையினரிடையே ஓவியக்கலை மூலம் ஆதிச்சநல்லூர் கீழடி சிந்துவெளி நாகரிகத்தினை பள்ளி மாணவ மாணவிகள் எடுத்துரைத்துள்ளனர் .

 

 

இதன் மூலம் வரலாறு கலாச்சாரம் பண்பாட்டினை அனைவரும் உணர ஓவிய கண்காட்சி வழிவகுக்கிறது என்றார்.

 

 

கேரளா ஃபிலிம் ஆர்ட் டைரக்டர் ராஜசேகரன் பரமேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.

 

ஓவிய கண்காட்சியில் இளம் ஓவியர்களின் செம்பு மற்றும் வெண்கலம் காலம்,பானை கோட்டோவியம்,சிந்து வெளி தமிழ் எண்கள் தமிழ் தாய்,கீழடி வைகை ஆறு சிறப்புகள்,

சிந்துவெளிக்கும்- சங்க இலக்கியத்திற்கும்- தமிழ்நாட்டிற்ககும் உள்ள இணைகள்,கடவுள்களின் புலப்பெயர்வு முருகன்,எருமை,ஐராவதம் மகாதேவன் -அடையாள குறீயீடுகள், சேவல் சண்டை ( சிந்துச்சமவெளி சண்டை சேவல்கள் குறியீடு),

 

மொகஞ்சதாரோ பெருங்குளியலிடம் – சங்க இலக்கியத்தில் நீர் விளையாட்டு,

சிங்கம் யானை கலித்தொகை -103 ம் பாடல்,எலும்பை தின்னும்

ஒட்டகம் , கொடுமணல் அகழாய்வு வெளிர் மரபின் புலப் பெயர்வு ,காட்டுக் கழுதை ,ஜல்லிக்கட்டு காளை: ( கொல்லேறு தழுவுதல்),

கடச்சேனந்ததல் – கவுந்தியடிகள் ஆசிரமம்,சங்க இலக்கியம் குறிக்கும் காற்று ரோஜா,யாக் -கவரிமா இமயமலை,சுறா : நெய்தல்,

நடுகல் – அந்துவன்( தொல்காப்பியம்) – புலி மான் கோம்பை toததாதபட்டியில் 2400 வருட பழமையான நடுகற்கள் கிடைத்தது),

அழகன் குளத்து அகழாய்வு,

கீழடி சங்கு வளையல்கள்,

தேனூர் (2013 ம் ஆண்டு கிடைத்த 7 தங்க கட்டிகள் – கீழடி),வன்னி மரம் (கொற்கை),பாவை,வெம்பூர்- சித்திரக் கல்,ஏழு கோடுகள் கொண்ட சிந்து வெளி முத்திரைகள்,செம்பில் செய்தது போன்ற சுவர்கள்,கப்பல் முத்திரையும் காகமும்

( சிந்து வெளிப் பகுதியில் கண்டறியப்பட்ட கப்பல் முத்திரைகள்) காக்கை பாடினியார் நச்சௌவையார்),

அகில் மரம்,உறை கிணறு: நீர் மேலாண்மை,கீழடியில் கிடைத்த சூது பவளம் ‘ முத்துமணி, தந்தத்தால் செய்த பகடை ,அசோகரின் கிர்னர் கல்வெட்டு

மாங்குளமும் தமிழ் பிராமி கல்வெட்டும் தலைப்பில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. ஓவியம் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் க்யூஆர் கோடு இடம் பெற்றிருந்தது.

பொதுமக்கள் செல்போன் மூலம் க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்து ஓவிய வரலாற்றினை அறிந்தனர்.

 

இன்று நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன், திரைப்பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் உள்ளிட்டோர் பாராட்டுச் சான்றிதழையும் பரிசுகளையும் வழங்குகிறார்கள்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.