பள்ளி சுதந்திர தின விழாவில் தரக்குறைவாக பேசிய திருச்சி திமுக கவுன்சிலர் தாஜுதீனுக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் .
பள்ளி நிகழ்வில் மாணவர்களிடம் மாணவர் சங்கம் குறித்து அவதூறாக பேசிய 38 வது வார்டு கவுன்சிலருக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்.
இன்று ஆகஸ்ட் 15 இந்தியா முழுவதும் 79 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வந்த வேலையில் திருச்சி மாவட்டம் காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்த திமுக 38 வது வார்டு கவுன்சிலர் தாஜுதீன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேசும் போது
மாணவர் சங்கம் குறித்து மிகவும் மோசமான முறையில் தரக்குறைவாக மாணவர்களிடம் பேசியதை இந்திய மாணவர் சங்கம் திருச்சி மாநகர் மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது.
மாணவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக அவ்வப்போது இந்திய மாணவர் சங்கம் கல்வி நிலையங்களில் போராட்டங்களை நடத்துவது வழக்கம் , அதேபோல திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்களுடைய நலனுக்காக இந்திய மாணவர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளது.
குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகளில்
ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளயில்
பாழடைந்த பழைய கட்டிடத்தை இடிக்க கோரி இந்திய மாணவர் சங்கம் நடத்திய போராட்டத்தின் விளைவாக பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு இப்போது புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களை இந்திய மாணவர் சங்கத்தினர் பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்ததன் விளைவாக இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்த போது இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்தின் விளைவாக சாலை அமைத்து தரப்பட்டது பள்ளிக்கு வரக்கூடிய வழியில் ஆபத்தான நிலையில் உடைந்து கிடந்த சிறிய பாலம் போராட்டத்தின் விளைவாக மீண்டும் புதிதாக அமைத்து தரப்பட்டது.
இதுபோல ஏராளமான போராட்டத்தை மாணவர்களின் அடிப்படை தேவைகளையும் இந்திய மாணவர் சங்கம் செய்து வரக்கூடிய நிலையில் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் அந்த பகுதியின் 38 வது வார்டு கவுன்சிலர் தாஜுதீன் அந்தப் பள்ளிக்கு என்று எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து தரவில்லை, இந்திய மாணவர் சங்கத்தின் தொடர் முயற்சியாலும் போராட்டத்தின் விளைவாளும் மட்டுமே அந்த பள்ளியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட மாணவர் இயக்கம் குறித்து சுதந்திர தின நிகழ்வில் மிகவும் மோசமான முறையில் பேசியது மட்டுமில்லாமல் மாணவர்களிடம் அவர் சார்ந்திருக்க கூடிய அரசியல் கட்சி குறித்து துதி பாடியது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் 38 வது வார்டு கவுன்சிலர் தாஜுதீனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
என ஜி.கே.மோகன்
மாவட்ட தலைவர்
ஜி.சூரியா
மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.