ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்த தமிழக முதல்வரை சந்திப்பது என தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநிலத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் .
மத்திய ,மாநில அரசுகள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில பொதுக்குழுவில் தீர்மானம்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. பொருளாளர் மலேசியா மணி, மாநில அவைத்தலைவர் அமீருதின், மாநில கூடுதல் செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் ஸ்டாலின் வரவேற்பு உரை ஆற்றினார். மாநில துணை பொருளாளர் ரோஸ் நவீன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஜே.பி.ஆர் கன்ஸ்ட்ரக்சன் சேர்மன் ஜே.பி.ஆர்.கணேஷ் ராகவன், பனானா லீப் உரிமையாளர் மனோகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், திருச்சி தொகுதி ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதி மாரி என்கிற பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் ராணா .ராஜா, மாநில துணைத்தலைவர்கள் சத்திய நாராயணன், ஆறுமுகம், சண்முகநாதன், பக்கிரிசாமி, மாநில இணைச்செயலாளர் செந்தில், திருச்சி மாவட்ட தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் மனோ வர்மா, மாவட்ட பொருளாளர் அகரமுல்லா, திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ஸ்ரீதர், எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார் உள்பட தஞ்சை. திருவாரூர். மயிலாடுதுறை, கும்பகோணம்,
பெரம்பலூர், அரியலூர், கரூர். புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ரியல் எஸ்டேட் அதிபர்கள்,நில வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை முறைப்படுத்தி தொழிலாளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அரசு தரப்பில் உரிய அங்கீகாரம் பெறவும், தொழில் தரத்தை உயர்த்தவும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது,
ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு கொடுக்கும் கமிஷன் தொகையை ஒரு லட்சம் ரூபாய்க்கு மூன்று சதவீதம் என முறைப்படுத்த வேண்டும் ,ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களை புரோக்கர் என அழைப்பதை தவிர்த்து ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், நிலவணிகர்கள் என அழைக்க அரசு தரப்பில் உத்தரவிட தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றுவது,
ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை ஏற்படுத்துவது, மத்திய ,மாநில அரசுகள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வாரியம் அமைக்க வேண்டும், வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைக்க வேண்டும்,ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பொருளாதாரம், கல்வி போன்றவற்றை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் கொடி மற்றும் லோகோவை மாநில தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் வெளியிட நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.