திருச்சியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 கைது. பாலியல் தொழிலுக்கு தேவையான பொருட்கள் பறிமுதல்.
திருச்சியில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட வட மாநில பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு.
திருச்சி திருவரங்கம் பஞ்சகரை ஜே ஜே நகரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 44, ) இவர் அதே பகுதியில் ஒரு கட்டிடத்தில் சில பெண்களை வற்புறுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது குறித்து ரகசிய தகவல் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்தது .
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மல்லிகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாமில் ஒப்படைக்கப்பட்டனர் மேலும் மல்லிகாவிடம் இருந்து 5 செல்போன்கள் ரூபாய் 2000 பணம் மற்றும் பாலியல் தொழிலுக்கு தேவையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி மதுரை சாலை நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வாசிம் அக்கரம் (வயது 30) இவர் ஸ்ரீநிவாச நகர் பகுதியில் சில பெண்களை வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து வாசிம் அக்கரமை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜா மற்றும் பார்த்திபன் ஆகியோரை தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயது பெண் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீட்கப்பட்டு முகாம்களில் ஒப்படைக்கப்பட்டனர்.