திருச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.பி.சூர்யா பிரகாஷ் தலைமையில் சாலை மறியலால் பரபரப்பு . நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது .
பாசிச பாஜக அரசின் தேர்தல் ஆணைய முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.பி.சூர்யா பிரகாஷ் தலைமையில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சஹரிக்க ராவ் முன்னிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் சாலை மறியலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர்கள் கிருத்திகா, பினீஷ், பொது செயலாளர்கள் சரவணன் சுபசோமு, விஜய் பட்டேல், அபுதாகிர், மோதி பெரியசாமி, பிசிசி உறுப்பினர் லாரன்ஸ், சிறுபான்மை பிரிவு தலைவர் பஜார் மொய்தீன்
,நாகர்கோவில் மாவட்ட தலைவர் டைசன் ,திருச்சிமாநகர் மாவட்ட தலைவர் ரகுநாதன் மாவட்ட நிர்வாகிகள் ஹிஷாம், காமில், அல்ரசிக் மற்றும் மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.