பாலக்கரையில்
மெயின் ரோட்டில் நிறுத்தி இருந்த டாரஸ் லாரியை காணவில்லை.
பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் .
திருச்சி பாலக்கரை காஜா பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சைமன் லூர்துராஜ் (வயது 48) இவர் மன்னார்புரத்தில் உள்ள ஒரு மெட்டல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பாலக்கரை காஜா பேட்டை மெயின் ரோட்டில் டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு அருகில் சென்றார்.
இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவன் டாரஸ் லாரியை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான். இந்த சம்பவம் குறித்து சைமன் லூர்து ராஜ் பாலக்கரை பாலக்கரை காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து டாரஸ் லாரி மற்றும் அதனை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.