Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 18வது ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .

0

'- Advertisement -

ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

18வது ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .

 

 

திருச்சி ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18வது ஆண்டு விளையாட்டு விழா 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி, நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு பள்ளி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் தலைமை விருந்தினராக மு. ரமேஷ், ஐ.பி.எப்., ரயில்வே பாதுகாப்புப் படை, பொன்மலை வேலைத்திட்டம், திருச்சிராப்பள்ளி பிரிவு, தெற்கு ரயில்வே, சென்னை அவர்கள் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக,

•டாக்டர் ஏ. ஷாஜஹான்

பல்வேறு ஆராய்ச்சித் துறையின் தலைவர் மற்றும் உயிரணு தாவரவியல் இணை பேராசிரியர், ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி,

•டாக்டர் டெனிஸ் சகாயராஜ் OSM,

அதிபர், “Marianum”

• (Pontificial) தத்துவக் கல்லூரி, ரோம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

இவ்விழாவுக்கு வந்த விருந்தினர்கள் பள்ளி இசைக்குழுவினரால், பள்ளி மாணவர் தலைவராலும், நான்கு வண்ண நிற மாணவர்களின் தலைவர்களாலும் உபசரிக்கபட்டு வரவேற்கப்பட்டார்கள்.

விழா முழுவதும் நதியா மற்றும் மேரி பிரிஜித் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

விழாவானது 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை உடன் ஆரம்பமானது. REV. Dr. A. சவரியப்பன் OSM (பள்ளியின் தாளாளர்) மற்றும் REV. Fr. V. பிரான்சிஸ் சேவியர் OSM (பள்ளியின் முதல்வர்) அவர்களால் விழா தலைவர்களை கௌரவப் படுத்தி , பொன்னாடையும் நினைவுச்சின்னமும் வழங்கினார்கள்

விளையாட்டில் சிறந்த நான்கு மாணவர்கள் விளையாட்டு ஜோதியை ஏந்தி எடுத்துச் தலைமை விருந்தினரிடம் கொடுத்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார்கள்.

 

பின்னர் தலைமை விருந்தினரால் இவ்விழா ஆரம்பம் ஆகிறது என்று தெரிவித்து புறாக்களும் பலூன்களும் வானில் விடப்பட்டது.

 

தலைமை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு ஊக்கம் தரும் பயனுள்ள உரைகளை வழங்கினர்.

மாணவர்கள் பலவிதமான வண்ண காகித பூங்கொத்து Smile. மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி (Drill ) அணி வகுப்புகளை நிகழ்த்தினார்கள். மற்றும்

ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவ மாணவிகள் இந்திய வரைபடம் உருவாக்கும் அணிவகுப்பையும் மற்றும்

எட்டாவது மற்றும் ஒன்பதாம் .வகுப்பு மாணவ மாணவிகள் வண்ணமயமான இறகுகளை பயன்படுத்தி அணிவகுப்பை நிகழ்த்தினார்கள்.

12ம் வகுப்பு மாணவிகள் ஏரோபிக் நடனம் மூலம் அனைவரையும் வரவேற்றார்கள். சிலம்பம் மற்றும் மானுடக் கோபுரம் (பிரமிட்) ஆகிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நிகழ்த்தினர். அனைத்து போட்டிகளிலும் முதலில் வந்த பச்சை நிற வண்ண குழுவிற்கு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பரிசளித்தனர் மற்றும் சிவப்பு நிற வண்ண குழுவிற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது மற்றும் சிறந்த அணி வகுப்புக்குரிய பரிசை மஞ்சள் நிற வண்ண குழு கைப்பற்றியது. வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் தலைமை விருந்தினர்கள் சான்றிதழ்கள், கோப்பைகளை வழங்கினார்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஏழாம் வகுப்பு மாணவி கரோலின் டீனா நன்றியுரையாற்றினார்.

 

விழாவின் இறுதியில், பள்ளி இசைக்குழுவின் தேசிய கீத இசை ஒலிக்க, விழா இனிதே நிறைவு பெற்றது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.