மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார் முன்னாள் அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர்
திருச்சி மாவட்டத்தில் இந்த மாதம் 23,24,25 ஆகிய தேதிகளில் வருகை தரும் அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எழுச்சிமிகு சுற்றுப்பயண கூட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது குறித்த திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற
இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் டி.என்.டி.நடேசன், அசோகன், சிவக்குமார், அருணகிரி, நகர செயலாளர் பொன்னி சேகர், பேரூர் செயலாளர்கள் ஜேக்கப் அருள்ராஜ், ஜெயசீலன், பிச்சைபிள்ளை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி ஜார்ஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விடிஎம்.அருண் நேரு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக் பொதுக்குழு உறுப்பினர் விஜயா கலந்து கொண்டனர்.