திருச்சி ஏர்போர்ட் அருகே அம்மன் கோவிலில்
திருடிய வாலிபர் கைது. பணம் பறிமுதல்..
திருச்சி ஏர்போர்ட் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 66 ) அப்பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் இணைச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அன்று கோவிலில் பூஜை முடிந்தவுடன் கோவிலை பூட்டி விட்டுவீட்டிற்கு சென்றார் .
மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலினுள் சில மர்ம நபர்கள் கால் தடம் தெரிந்து உள்ளது.
இதையடுத்து கோவில் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் சோதனை செய்த போது சில மர்ம நபர்கள் கோயிலுள் புகுந்து உண்டியலில் சிறிய குச்சி மூலம் பசையை தடவி பணத்தை திருடி கொண்டு சென்றது தெரியவந்தது .
இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து ஏர்போர்ட் காமராஜர் நகர் சேர்ந்த கார்த்திக் குமார் (வயது 25 ) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து உண்டியலில் திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .