ஸ்ரீரங்கத்தில் புரோகிதம் செய்ய வேண்டும் எனக் கூறி வீடு புகுந்து திருடிய முதியவர் கைது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
ஸ்ரீரங்கம் விஓசி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 35, ) புரோகிதர்.
சம்பவத்தன்று இவரிடம் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சந்தான கோபால் (வயது 63 ) என்பவர் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு பூஜைகள் செய்ய சீனிவாசரை புக் செய்ய என இவரை அழைத்துள்ளார் .அதற்கு சீனிவாசன் ஒப்புக்கொண்டுள்ளார் .இதை தொடர்ந்து சந்தான கிருஷ்ணன் குடிதண்ணீர் கேட்டுள்ளார் ஸ்ரீனிவாசன் வீட்டுக்குள்ளே வந்தபோது சந்தானகோபால் அவருடைய வீட்டினுள் மற்றொரு அறையில் புகுந்து பீரோவில் இருந்த ஆறு சவரன் தங்க நகை திருட முயன்றதை அவர் சீனிவாசன் பார்த்து கையும் களவுமாக சந்தானகிருஷ்ணனை பிடித்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தான கோபாலை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.