பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு .
திருவெறும்பூரில் அமைந்துள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று வெள்ளிக்கிழமை முன்னறிவிப்பு இன்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாணவரின் மரணம் குறித்து கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்து, பள்ளி மாணவர்களிடமும் கலந்துரையாடினார்.
மாணவர் பயின்று வந்த வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஊக்கமளிக்கும் உரை போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.