மதிய உணவு சாப்பிட்ட 27 பள்ளி குழந்தைகள் வாந்தி மயக்கம் . சமையலர் சஸ்பெண்ட் செய்து திருச்சி கலெக்டர் உத்தரவு .
திருச்சி அருகே கொடியாலம் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில் அப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளா், சமையலா் ஆகியோா் நேற்று புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியத்துக்குட்பட்ட கொடியாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்கள் வாந்தி, வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டு, அந்தநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனா்.
அப்போது மாணவா்களின் பெற்றோா் எழுப்பிய கோரிக்கையை ஏற்று புதன்கிழமை பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து மற்ற மாணவா்களுக்கும் உடல் பரிசோதனை செய்து, சிகிச்சையளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தநல்லூா் வட்டார கல்வி அலுவலா், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சண்முகம், பிரபாகரன் ஆகியோா் பள்ளியில் உணவுப் பொருள்களை ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முகம் அளித்த ஆய்வறிக்கையின்படி, பணியில் அலட்சியமாக இருந்த சமையல் அமைப்பாளா் நாகம்மாள், சமையலா் சாந்தி ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார் .
இதனிடையே மாணவா்கள் சாப்பிட்ட உணவு மாதிரி ஆய்வுக்காக தஞ்சை உணவுப் பாதுகாப்புக் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக உணவுப் பாதுகாப்பு த்துறையினா் தெரிவித்துள்ளனர் .