Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழந்தைகளோடு நடனமாடும் ரோபோடிக் நாய், புகைப்படம் எடுக்கும்,பெண் ரோபோ,புதுவகை ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெறும் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

திருச்சியில் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திறந்து வைத்தார்.

 

திருச்சி கே.கே. நகர் சாலையில் எல்ஐசி காலனி, சபரி மில் பேருந்து நிறுத்தம் அருகே டைட்டானிக் கப்பல் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த பொருட்காட்சியை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்த திறப்பு விழாவின் போது பொருட்காட்சி சங்கத் தலைவர் அன்வர் ராஜா, கப்பல் வடிவமைப்பாளர் மதுரை ஆர்டிஸ்ட் சரவணன், ஏர்போர்ட் சலீம், பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், நாகர்கோவில் பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் கூறுகையில்:-

 

திருச்சி கே.கே.நகர் மெயின் ரோடு எல்.ஐ. சி காலனியில் உள்ள சபரிமில் மைதானத்தில் டைட்டானிக் கப்பல் பொருட்காட்சியை மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக பெரம்பலூர் நளபாகம் கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் முத்துவீரன் வரவேற்றார். தமிழ்நாடு பொருட்காட்சி சங்க மாநில தலைவர் அன்வர் ராஜா முன்னிலை வகித்தார் இப் பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்விக்கும் வகையில் இரண்டு ரோபோட் நாய்களின் பல வகையான திறமைகளை அசத்தி வருகிறது.. மேலும் குடும்பத்துடன் செல்பி எடுப்பதற்கு பல வகையான போட்டோ பிரேம் வசதியுடன் பார்க் வைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் ரோபோட் லேடி போட்டோ எடுத்து உடனடியாக போட்டோ எடுத்து கொடுக்கிறது. கொலம்பஸ், ஜாயிண்ட் வீல், ரேஞ்சர், டிஸ்கோ கோஸ்டர், டிராகன் டிரெயின், பிரேக் டான்ஸ், ஜிக்ஜாக், குழந்தைகள் விளையாடும் மகிழ வாட்டர் போட், பலூன் ஜம்பிங், ஹெலிகாப்டர்,கார் பைக் ராட்டினங்கள், பேய் வீடு, 11D ஷோ, ஸ்னோ வேர்ல்ட், மற்றும் பல விளையாட்டு சாதனங்கள் பொதுமக்களை மகிழ்விக்க உள்ளன.வீட்டு உபயோக பொருட்கள், பேன்சி பொருட்கள்,பல வகையான உணவுபொருட்களின் ஸ்டால்கள், ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள்,இன்சூரன்ஸ் கம்பெனி, பர்னிச்சர், அழகு சாதன பொருட்கள்,குழந்தை களுக்கான விளையாட்டு பொருட்கள், கைவினைபொருட்கள், கிப்ட் பொருட்கள், ஹோம் டெக்கர்ஸ்,கேம்ஸ் ஷோ, கல்வி நிறுவனங்கள், உணவுபொருட்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்படுள்ளன.

விழாவில் மாநகர செயலாளர் மதிவாணன், மாநகராட்சி கவுன்சிலர் மலர்விழி ராஜேந்திரன்,கலைஞர் பகுதி செயலாளர் மணிவேல்,வட்ட செயலாளர் கலிய மூர்த்தி,தமிழ்நாடு பொருட்காட்சி சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் சலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.விழா விற்கான ஏற்பாடுகளை பத்ரி என்டர்டெயின்மென்ட் உரிமையாளர் சுதாகரன், மேலாளர் ராஜா செய்தனர். செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் இப்பொருட்காட்சி தினசரி மாலை 4:30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என சுதாகர் தெரிவித்தார் ..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.