ஏன் இன்னும் தூங்குகிறாய் எனக் கேட்ட ஜெயிலரை தாக்கிய கைதிகள் 4 பேர் மீது வழக்கு.திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு:
r
ஏன் இன்னும் தூங்குகிறாய் எனக் கேட்ட ஜெயிலரை தாக்கிய கைதிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு .திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு:
கேகே நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி மத்திய சிறையில், மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன் ( வயது 28) தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இவர் துாங்கிக் கொண்டிருந்தபோது, சோதனைக்கு வந்த துணை ஜெயிலர் மணிகண்டன், ஹரிஹரசுதனை பார்த்து, ‘ஏன் துாங்கிக் கொண்டிருக்கிறாய்?’ என கேட்டுள்ளார். அதற்கு ஹரிஹரசுதன் திமிராக பதில் சொல்ல, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணிகண்டனை, ஹரிஹரசுதன் தாக்கியுள்ளார். அதே அறையில் அடைக்கப்பட்டு உள்ள தண்டனை கைதிகள் ஆனந்த், ராஜேஷ், மகாதேவன் ஆகியோரும் மணிகண்டனை தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த சிறைத்துறை காவலர்கள், அவர்களை விலக்கி விட்டு மணிகண்டனை காப்பாற்றினர்.
இத்தாக்குதலில் மணிகண்டன் காயமடைந்தார். இதுகுறித்து துணை ஜெயிலர் அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் கைதிகள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில், துணை ஜெயிலர் தாக்கப்பட்ட சம்பவம் சக கைதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.