Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வருகை. உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம் எடப்பாடியுடன் சந்திப்பு

0

'- Advertisement -

பிரதமர் மோடி இன்று

இரவு திருச்சி வருகை.

உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம். இபிஎஸ்சை சந்திக்கிறார் .

 

 

ரோடு – ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்

 

உயர் பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்

 

பிரதமர் வருகையையொட்டி, திருச்சி விமானநிலையம் மற்றும் மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். 26-ம் தேதி மாலை தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்துவிட்டு, இன்று இரவு 10.30க்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். சாலை மார்க்கமாக காரில் செல்லும் அவர்,

திருச்சி கலெக்டர் அலுலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் (கோர்ட்யார்டு) ஓய்வெடுக்கிறார்.

நாளை காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கண்ட சோழபுரம் செல்கிறார். பின்னர்

அங்கு நடைபெறும் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நட்சத்திரமான ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்று பேசுகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

முன்னதாக தனியார் ஓட்டலில் இருந்து, விமானநிலையம் வரையிலான வழித்தடத்தில் ரோடு ஷோ செல்வதற்கான ஏற்பாடுகளை பாஜவினர் செய்து வருகின்றனர். இதையொட்டி, மக்களை திரட்டும் பணியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, திருச்சி வந்துள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்பிஜி) டிஐஜி விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் தனியார் ஓட்டல் ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள திருச்சி விமானநிலையத்தில் வாகனங்கள், பயணிகள் மற்றும் அவரது உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். விமானநிலையத்தின் கார் பார்க்கிங், பயணிகள் வருகை, புறப்பாடு ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளது.

மேலும் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்பிஜி அதிகாரிகள் விமானம் மூலம் விமானநிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் வானில் வட்டமடித்தப்படி ரோந்து சென்றனர். நுழைவு வாயில் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதையொட்டி, தேவையில்லாத வாகனங்கள் மற்றும் ஆட்கள் செல்லவது தடுத்து நிறுத்தப்படுகிறது.

 

விமானநிலைய ஊழியர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல பிரதமர் தங்கும் தனியார் ஓட்டலிலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் எஸ்பிஜி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வந்து செல்லும் திருச்சி – புதுக்கோட்டை சாலை, பாரதிதாசன் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, குட்ஷெட் மேம்பாலம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநகர் மற்றும் விமானநிலைய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி –புதுக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி மற்றும் கடை வீதிகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் முகப்பு சாமியானா பந்தல் மூலம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் தூய்மைப்பணிகள் மற்றும் சாலைகளில் இருந்த குழிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நேற்று மாலை முதல், நாளை மதியம் வரை மூட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விமானநிலையம் மற்றும் கலெக்டர் அலுவலக சாலையில் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விமானநிலையம் மற்றும் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.