திருச்சி காட்டூரில் காரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி
கடத்திய வாலிபர் கைது
மூட்டை மூட்டையாக பறிமுதல்.
திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி உத்தரவின் படி, திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உணவு பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டூர் தனியார் பள்ளி அருகே சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை ஆம்னி காரில் கடத்தி வருவதாக ரகசிய போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் வாகனத்தில் 25 சாக்கு முட்டையில் கடத்தி வந்த 1250 கிலோ ரேஷன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தொடர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட சத்யாவை கைது செய்து நீதிமன்ற காவல் உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.